குக்கூ குழந்தைகள் வெளி - சிறு அறிமுகம்
Edit குக்கூ குழந்தைகள் வெளி - சிறு அறிமுகம் குக்கூ இந்த சொல் ஒரு மாலைப்பொழுதை குறிக்கின்றது ஒரு தீராத தேடலை ஒரு மலைமுகடையும் குக்கூ குழந்தைகள் வெளி இது குழந்தைகள் தங்களை தங்களின் இருப்பை வெளிப்படுத்த உதவும் சிறு முயற்சியே. இறுக்கமான வகுப்பறைக்குள் இருக்கும் மாணவர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்கி சுதந்திரமாகவும் உயிர்ப்போடும் வாழ்வை அனுகச்செய்வதேயன்றி இந்த வெளி வேறில்லை. குக்கூ குழந்தைகள் வெளி இயற்கை குறித்தும் நம் ஆகச்சிறந்த அடிப்படைகள் குறித்தும் குழந்தைகளிடம் பேசுகிறது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு விதைகளை சேகரிக்க காடுகளுக்கும் மலைச்சரிவுகளுக்கும் நீர்நிலைகளுக்கும் செல்கிறது. சேகரித்த விதைகளை குழந்தைகள் தத்தம் வீட்டில் தினமும் நீரூற்றி வளர்க்க ஊக்கப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு நாட்டுப்புற நடனங்களும், நடிப்பையும், ஓவியம் , சிற்பக்கலை போன்ற நுண்கலைகளும் பயிற்றுவிக்கிறது. குழந்தைகளின் எண்ணங்களின் விரிவை நோக்கும் தேர்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது. இந்த வெளியில் யாவரும் பயணிக்கலாம். நேரடியாக களப்பணியாற்றலாம்.