Posts

Showing posts from December, 2012

குக்கூ குழந்தைகள் வெளி - சிறு அறிமுகம்

Edit குக்கூ குழந்தைகள் வெளி - சிறு அறிமுகம் குக்கூ இந்த சொல் ஒரு மாலைப்பொழுதை குறிக்கின்றது ஒரு தீராத தேடலை ஒரு மலைமுகடையும் குக்கூ குழந்தைகள் வெளி இது குழந்தைகள் தங்களை தங்களின் இருப்பை வெளிப்படுத்த உதவும் சிறு முயற்சியே. இறுக்கமான வகுப்பறைக்குள் இருக்கும் மாணவர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்கி சுதந்திரமாகவும் உயிர்ப்போடும் வாழ்வை அனுகச்செய்வதேயன்றி இந்த வெளி வேறில்லை. குக்கூ குழந்தைகள் வெளி இயற்கை குறித்தும் நம் ஆகச்சிறந்த அடிப்படைகள் குறித்தும் குழந்தைகளிடம் பேசுகிறது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு விதைகளை சேகரிக்க காடுகளுக்கும் மலைச்சரிவுகளுக்கும் நீர்நிலைகளுக்கும் செல்கிறது. சேகரித்த விதைகளை குழந்தைகள் தத்தம் வீட்டில் தினமும் நீரூற்றி வளர்க்க ஊக்கப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு நாட்டுப்புற நடனங்களும், நடிப்பையும், ஓவியம் , சிற்பக்கலை போன்ற நுண்கலைகளும் பயிற்றுவிக்கிறது. குழந்தைகளின் எண்ணங்களின் விரிவை நோக்கும் தேர்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது. இந்த வெளியில் யாவரும் பயணிக்கலாம்.   நேரடியாக களப்பணியாற்றலாம...

குக்கூ காட்டு பள்ளி

Image
இனியவர்களே.... நாம் நம் நீண்ட கால செயலினூடாக சென்று சேர இருக்கின்ற நிலம் செம்மண்ணோடு ஜவ்வாது மலை அடிவாரத்தில் தாவரங்கள் முளைத்து பூமி மீது படர்ந்திருக்கிறது. சமூகத்திற்கு வெளியேயும், கானகத்திற்கு உள்ளேயும் இயற்கையை கவனிக்கவும், மனித மாண்பையும், சமூகத்தை கற்கவும் பிறர் மனம் நோகா அறநெறியோடும், கலாச்சாரப் பண்பாட்டு மன அழுத்தங்களிலிருந்து விடைபெற்று, நிபந்தையற்ற அன்பு, எல்லையற்ற காருண்யம், இணைக்கப்பட்ட ஆன்மாக்களின் பன்நிற பயணம். தன்னிலையில் உயிர்த்திருக்கும் இயல்பூக்க கற்றலின் கொட்டகையொன்றை நாம் அனைவரின் கரம் கொண்டு நெய்ய உள்ளோம். கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் அந்நிலம் இருக்கும்... அங்கே குழந்தைகள் களங்கமற்ற குதூகலத்தையும், முதியவர்கள் தங்கள் வாழ்வனுபவ ஞானத்தின் எல்லையின்மைகளை விரல் கோர்த்துக்கொள்ளலாம்... இயற்கைக்கு விரோதமற்ற நிஜமான மனித தேவைகளுக்கான, மரபான தொழில்நுட்பங்கள், இயற்கை வழி நிரந்தர வேளாண்மை, காலத்திலிருந்து விடுபட்டு பன்முக பருவங்களின் வியாபித்த...

Cuckoo Forest School

Image
Dear Friends,  Cuckoo continues its journey with the environment, hand in hand with children and the community, with the possibility of building  a cradle, a forest school for children from all sections of society and home for the elderly,  A space of inspiration, learning and truth nestled within the red soil of the Jawadhu Hills. Initially the school will priortise the indigenous tribal people of that area. A Outside of mainstream society and inside the forest we are able to observe the richness of nature and the wisdom that streams through the land. The classroom will be the forest and the hills, the animals, insects, reptiles, trees and plants and the seasons. In essence we will learn from the harmony and wisdom that underpins all of life and death, the greatest field, a united field o    A place to watch  a seed grow;  smell the earth in which it lives. o    A place to listen to the wind; feel it play on the skin o  ...