கட்டற்ற சுதந்திரம் ஒன்று மட்டும் தான் குழந்தைகளின் ஆகச் சிறந்த தேவையாக உள்ளது.ஓடுவதற்கும்,ஆடுவதற்கும்,தேடுவதற்கும்,குதிப்பதற்கும்,உடைப்பதற்கும், கோர்பதற்கும்,சேகரிப்பதற்கும்,வீணாக்குவதற்கும் அவர்களை அனுமதிக்கும் போது ஓழுங்கற்ற ஓழுங்குக்குள் அவர்கள் வந்து சேர்வார்கள்.நமது நொடி தவறாத செயல்பாடுகளின் பிரதிபளிப்பே அவர்களின் குண நலன்கள்.நல்ல சூழலும் சுதந்திரமும் மட்டுமே நாம் அவர்களுக்காக உருவாக்க வேண்டியது.
அப்படியான சூழல் தான் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற நெல்லி வாசல் குக்கூ குழந்தைகள் சந்திப்பில் அமையப் பெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளது.வெடித்து சிரிக்கும் முகங்களும்,நெருப்பின் மஞ்சள் வண்ணம் அப்பிக் கிடக்கும் தருணங்களும்,சுதந்திரத்தை அனுபவிக்கும் அவர்களின் உடல் மன அசைவுகளையும் ஒவ்வொரு புள்ளியிலும் காணலாம்.இந்த முகாமை நல்ல படியாய் நடத்துவதற்கு பேருதவியாய் இருந்த மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பெரும் நன்றி.
|
ஊத்துக்குளி மற்றும் நெல்லிவாசல் மலை கிராம குழந்தைகளின் உற்சாகமான சந்திப்பு |
|
சிற்பி வில்சன் |
|
தண்ணீரை தெய்வமாக வழிபடும் மக்கள் |
|
குன்றை நேசித்தபடியே
அதைப் பிளந்துகொண்டிருந்தது மரம்
அந்தப் பிளவில் தம் பீடமைத்தன பறவைகள் |
|
கூத்துக் கலைஞர்கள் முகிலன்,செந்தமிழன் புகைப்பட கலைஞன் பழனி |
|
சிற்பி எழில் அண்ணன்
|
|
மலை கிராமத்து சிறுமி உருவாக்கிய பட்டாம் பூச்சி நூலகத்தில் |
|
காகித மடிப்பு கலைஞர் சேகர் குழந்தைகளோடு |
|
கதை சொல்லி சதீஷ் |
|
உன்னத தலைமையாசிரியர் |
|
ஆலங்கட்டி மழையில் ஆட்டம் போடும் வாண்டுகள் |
|
கிழிந்த புத்தகத்தின் உதிரிகளை கொண்டு உருவாக்கப் பட்ட ஓவியம் |
|
நெல்லிவாசல் குக்கூ குழந்தைகள் நூலகம் |
|
எளிய மக்களின் உணவு குழந்தைகளுக்காக |
|
இரவு சந்திப்பு |
|
குக்கூவின் தன்னியல்பான ஓவியக் கலைஞன் பிரகாஷ் |
|
நீரோடையில் |
|
பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு
பொங்கும் குழந்தைமை |
Awesome clicks and story ....
ReplyDeleteஅருமை... உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்... எனக்கு நேரம் வாய்த்தால் நேரிடையாக வந்து காண்கிறேன். மகிழ்ச்சி...’
ReplyDelete