குக்கூவுடன் ஒருநாள்
தனக்கு தெரிந்ததையோ அல்லது கற்று க்கொ ண்டதையோ மற்றவர்களுக்கு பயனளிக்கும் பொழுதோ அல்ல மற்றவர்களுக்கு பிரதிபலன் பாராமல் கற்று கொடுத்து அதனால் அவர்கள் மகிழ்ச்சியடையும் பொழுதுதான் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாற்றம் அடையும் அடைகிறது . அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் சரி . சிறுவர் கோடைகால முகாமில் - விளையாட்டின் தீவிரம் எல்லோருக்கும் வாழ்க்கையில் பல கட்டங்களில் நிதர்சனத்தை தன் அனுபவத்தின் மூலமாக தரிசிக்கும் வாய்ப்பினை கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் அமைத்து கொடுக்கும் . வாய்ப்பினை பயன்படுத்தி கொள்பவர்கள் தன் சுயத்தை மேம்படுத்தி கொண்டும் சூழலையும் மேம்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர் . ஊத்துகுளியில் உள்ள குக்கூ குழந்தைகள் நூலகம் எதை எதையோ நினைத்துகொண்டு திரிந்த எனக்கு வாழ்வின் அர்த்தத்தை கற்றுகொடுத்துள்ளது . குக்கூ குழந்தைகள் நூலகம் - ஊத்துகுளி விவசாயிகளின் நண்பன் மண்புழு என்பதுபோல மண்புழு என்ற சிற்றிதல் மூலம் எனக்கு நல்ல மனங்கொண்ட பல உறவுகள் கிடைத்தது...